டாப் 3 லிஸ்ட்:
பட்லர் தற்போது 491 டி20 இன்னிங்ஸ்களில் 14,833 ரன்கள் எடுத்துள்ளார். இது, 14,803 ரன்களுடன் இருக்கும் பொல்லார்டை விட 30 ரன்கள் அதிகம். பொல்லார்டின் மேற்கிந்திய தீவுகள் அணியின் சக வீரரான கிறிஸ் கெய்ல், 14,562 ரன்களுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து, இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
தனிப்பட்ட காரணங்களால் வழக்கமான கேப்டன் ஏய்டன் மார்க்ரம் தொடரில் இருந்து விலகியதை அடுத்து, சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக பட்லர் பங்கேற்ற முதல் ஆட்டம் இதுவாகும்.
இங்கிலாந்தில் நடைபெற்று கொண்டிருந்த ‘தி ஹன்ட்ரட் 2026’ தொடரின் பாதியிலேயே தனிப்பட்ட காரணங்களுக்காக தனது சொந்த நாடான தென் ஆப்பிரிக்காவிற்கு திரும்பியதால், மார்க்ரம் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க மாட்டார்.