0
வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்த மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது. பிங்க் பாலில் நடைபெற்ற 3ஆவது டெஸ்டின் 2ஆவது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 26 ரன்னில் சுருண்டது.
இதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸின் டெஸ்ட் கிரிக்கெட்டை மீட்டெடுக்க, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்த முன்னாள் வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் மற்றும் மற்ற டி20 லீக் ஆகியவற்றின் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் தரம் குறைந்து வருகிறது. டி20 லீக்குகளில் இடம் பிடிப்பதற்காf, தேசிய அணியை ஒரு படிக்கல்லாக பயன்படுத்துகின்றனர் என லாரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக லாரா கூறியதாவது:-
நாங்கள் முதல்-தர கிரிக்கெட்கள் விளையாடினோம். சில வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பிடிப்பதற்காக கவுன்ட்டி கிரிக்கெட்டில் கூட விளையாடினார்கள். தற்போது லீக் போட்டிகளில் விளையாடுவதற்கான ஒப்பந்தங்களை பெறுவதற்னாக படிக்கல்லாக வெஸ்ட் இண்டீஸ் அணியை பயன்படுத்துகின்றனர். இது வீரர்களின் தவறு கிடையாது
இவ்வாறு லாரா தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோஸ் பூரன், டி20 லீக்குகளில் விளையாடுவதற்காக 29 வயதிலேயே ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.