அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
மேலும், டெக்சஸ் மாநில திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்களில் கோடை முகாமுக்காக நதிக்கரையில் தங்கியிருந்த 27 சிறுமிகளும் அவர்களது ஆலோசகர்களும் அடங்குவர்.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முகாம் இரங்கல் தெரிவித்ததாக BBC கூறியது.
தொடர்புடைய செய்தி : டெக்சாஸ் மாநில வெள்ளத்தால் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 78ஆக உயர்வு
காணாமற்போன சிறுமிகளைத் தேட முகாம்தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகளுடன் பணியாற்றிய போதும் அவர்கள் உயிரிழந்துள்ளதாக BBC கூறியது.
ஹெலிகாப்டர், படகுகள் மற்றும் மோப்ப நாய்கள் ஆகியவற்றைக் கொண்டு, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களை 1,750 பணியாளர்கள் தீவிரமாகத் தேடினர்.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வரும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) பார்வையிடவுள்ளார்.
The post டெக்சஸ் மாநிலத்தில் தொடரும் மழை; தேடல் பணிகள் ஸ்தம்பிதம்! appeared first on Vanakkam London.