• Sun. Nov 1st, 2026

24×7 Live News

Apdin News

டெல்லியில் இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் – தற்போதைய நிலை என்ன?

Byadmin

Nov 1, 2026


டெல்லியில் இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் - தற்போதைய நிலை என்ன?

படக்குறிப்பு, கோப்புப்படம்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

ஞாயிற்றுக்கிழமை டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்றும், தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ள இந்தப் பொதுக்கூட்டம், நண்பகல் 12 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் தொடங்க உள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் பலரும் இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர். காக்ரோச் ஜனதா கட்சியும் பொதுக்கூட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக 10 லட்சம் பேர் டெல்லிக்கு வருவார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் தெரிவித்துள்ளார்.



By admin