• Sun. Nov 1st, 2026

24×7 Live News

Apdin News

பேய்கள் இருப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுவது ஏன்? அறிவியல் கூறும் காரணங்கள்

Byadmin

Nov 1, 2026


பழைய காலத்துத் தோற்றம் கொண்ட, மூடுபனி சூழ்ந்த காடு ஒன்றின் புகைப்படம்; அதன் தரைப்பகுதி முழுவதும் சிவப்பு நிற இலைகள் படர்ந்திருக்கின்றன. அந்தப் புகைப்படத்தின் மையப்பகுதியில், கேமராவுக்கு முதுகைக் காட்டியபடி, ஒரு மர்மமான, அரை-வெளிப்படையான தோற்றம் கொண்ட பெண் நிற்கிறாள். அவளுக்கு நீண்ட கருமையான கூந்தல் உள்ளது, மேலும் அவள் வெள்ளை நிற ஆடை அணிந்திருக்கிறாள்.

    • எழுதியவர், டெய்சி ஸ்டீஃபன்ஸ்
    • பதவி, பிபிசி உலக சேவை
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

உயிரிழந்தவர்களின் ஆன்மாக்களைக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அவர்களின் குடும்பத்தினருக்கு இருப்பதாகக் கூறும் பண்டைய மெசபடோமியக் கதைகள் முதல் சார்லஸ் டிக்கன்ஸின் ‘எ கிறிஸ்துமஸ் கரோல்’ கதை வரை, பேய்கள் குறித்த கதைகளைச் சொல்வதில் மனிதர்களுக்கு நீண்டகால வரலாறு உண்டு.

ஆனால், பேய்கள் மீதான நமது ஆர்வம் இன்றும் ஏன் தொடர்ந்து நீடிக்கிறது?

அமெரிக்காவின் வெஸ்ட் ஜார்ஜியா பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் கிறிஸ்டின் சிம்மண்ட்ஸ்-மூர் கூறுகையில், இயற்கைக்கு அப்பாற்பட்டவை என்று தாங்கள் நம்பும் அனுபவங்களைப் பலரும் உண்மையாகவே எதிர்கொள்கின்றனர்.

பொதுவாக, தற்போதைய அறிவியலால் விளக்க முடியாத நிகழ்வுகளைக் குறிப்பிடவே ‘இயற்கைக்கு அப்பாற்பட்டவை’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

“அந்த அனுபவங்கள் அவர்களைப் பொறுத்தவரை உண்மையானவை. அவை அவர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும்” என்கிறார் அவர்.



By admin