• Thu. Oct 8th, 2026

24×7 Live News

Apdin News

டெல்லியில் எதிர்க்கட்சிகள் மூன்றாவது நாளாக போராட்டம் – என்ன நடக்கிறது?

Byadmin

Oct 8, 2026


'4 பேர் கட்டுப்பாட்டில் இந்தியா': டெல்லியில் எதிர்க்கட்சிகள் மூன்றாவது நாளாக போராட்டம்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடத்தி வரும் போராட்டம் அக்டோபர் 8-ஆம் தேதி மூன்றாவது நாளாகத் தொடர்கிறது.

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏற்பாடு செய்திருந்த மதிய விருந்தில் ‘இந்தியா’ (INDIA) கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.

மதிய உணவுக்குப் பிறகு, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா மற்றும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மூன்று பேருந்துகளில் ஏறி காந்தி நினைவிடமான ராஜ்காட் நோக்கிச் சென்றனர். அங்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் உறுதியளித்துள்ளன. சமாஜ்வாதி கட்சி, சிவசேனா (உத்தவ் தாக்கரே)) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) ஆகியவற்றின் எம்.பி.க்களும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர்.

ராஜ்காட் புறப்படுவதற்கு முன் ராகுல் காந்தி பேசுகையில், “மாநிலங்களவை மற்றும் மக்களவையைச் சேர்ந்த 300 எம்.பி.க்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த விரும்புகிறோம். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக எங்களைப் போராட்டம் நடத்த அனுமதிக்கவில்லை. முதல் நாளில், தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு முன்பாகவே நாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டோம். அதன்பிறகு, நாங்கள் ஜந்தர் மந்தருக்குச் செல்வதாகக் கூறினோம். அங்கேயும் செல்லவிடாமல் நாங்கள் தடுக்கப்பட்டோம்; எங்கள் கட்சியினர் தாக்கப்பட்டனர்,” என்றார்.

“நரேந்திர மோதி, அமித் ஷா, மோகன் பகவத் மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோர் ஒரு குற்றவியல் சதி மூலம் இந்தியாவைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டனர். அவர்கள் அரசியலமைப்பைச் சிதைத்துவிட்டனர்; வாக்குகளைத் திருடிவிட்டனர். இந்த நால்வரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்பது எங்கள் உறுதிமொழி,” என்று குற்றம் சாட்டினார்.

By admin