• Tue. May 19th, 2026

24×7 Live News

Apdin News

டெல்லியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் எழுப்பும் கேள்விகள்

Byadmin

May 19, 2026


இந்த வழக்கில் இரண்டு பேரை கைது செய்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது (சித்தரிப்புப்படம்).

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த வழக்கில் இரண்டு பேரை கைது செய்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது (சித்தரிப்புப்படம்).

    • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

(எச்சரிக்கை: இக்கட்டுரையின் சில பகுதிகள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்)

“நான் ஒரு பாலியல் தொழிலாளி. அப்படியென்றால், அவர்கள் என்னை கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்வார்களா?”

டெல்லியில், படுக்கை வசதி கொண்ட பேருந்தில் சிலர் தன்னை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளார். அந்தச் சம்பவத்தை விவரிக்கும்போது, ​​அவர் எழுப்பும் முதல் கேள்வி இதுதான்.

டெல்லி காவல்துறையின் தகவலின்படி, மே 11 மற்றும் 12 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில், நள்ளிரவு 12:15 மணி முதல் 2:30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக ஒரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது; மேலும், இவ்வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் டெல்லிக்கும் பிகாருக்கும் இடையே இயங்கும் படுக்கை வசதி கொண்ட பேருந்தின் ஓட்டுநரும் க்ளீனரும் ஆவர்.

By admin