இந்த இரட்டைகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து படப்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் இரட்டை கொலை தொடர்பாக தாம்பரம் அருகே வீடு ஒன்றில் பதுங்கி இருந்த பல்லாவரத்தைச் சேர்ந்த மணி என்கிற ஐயப்பன்(26), படப்பையை சேர்ந்த சந்தோஷ் (23), முடிச்சூரை சேர்ந்த குமரவேல்(20), பெருங்களத்துரைச் சேர்ந்த வேலன் (19), பீர்க்கங்கரணியைச் சேர்ந்த அன்பு (20) மற்றும் 2 சிறுவர்கள் உள்ளிட்ட மொத்தம் 7 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் கொலைக்கான காரணம் என்ன? கொலை திட்டத்தை அரங்கேற்றியது எப்படி? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் யார்? என்று காவல் உதவி ஆணையர் சுந்தர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கொலையுண்ட பரத்தை முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த பெட்டி என்கிற குமாரவேல் அடிக்கடி பொதுமக்கள் முன்னிலையில் அடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பரத் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவரிடம் “பெட்டி குமரவேல் எந்த பகுதியில் உள்ளார். அவரை மிக விரைவில் கொலை செய்து விடுவேன். எனவே அவர் இருக்கும் இடத்தை தெரிவிக்குமாறு” கூறி மிரட்டி தாக்கி சென்று உள்ளார்.
ஆனால் சிறுவன் எதுவும் தெரிவிக்காததால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் முடிச்சூர் பகுதியில் உள்ள சிறுவன் வீட்டிற்கு பரத் சென்று பெட்டி குமாரவேல் குறித்து கேட்டு சிறுவனுக்கும் கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக தெரிகிறது.
இதுபற்றி சிறுவன், பெட்டி குமரவேலிடம் தெரிவித்து அழுது உள்ளான்.