• Thu. Jul 23rd, 2026

24×7 Live News

Apdin News

டெல்லியில் தொடரும் போராட்டம்: மோதி கூறியதும் அதற்கு ராகுலின் பதிலும் என்ன?

Byadmin

Jul 23, 2026


பிரதமர் மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதமர் மோதி (கோப்புப்படம்)
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நாட்டின் இளைஞர்களின் நலனும் அவர்களின் எதிர்காலமுமே தங்களின் முன்னுரிமை என்று பிரதமர் நரேந்திர மோதி வியாழக்கிழமை (ஜூலை 23) தெரிவித்தார்.

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகளைத் தண்டிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாகப் பிரதமர் கூறினார்.

“சம்பந்தப்பட்ட துறைகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதி செய்ய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அரசு எடுத்து வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீர்குலைக்கும் எவரும் தப்பவிடப்பட மாட்டார்கள்,” என்று பிரதமர் மோதி தெரிவித்தார்.

வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரங்கள் தொடர்பாக மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டங்களை நடத்தி வரும் சூழலில் பிரதமரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

ராகுல் காந்தி கூறியது என்ன?

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராகுல் காந்தி (கோப்புப்படம்)

பிரதமர் மோதிக்கு பதிலளிக்கும் விதமாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில், “நமது இளைஞர்களின் எதிர்காலத்துக்கு நீங்கள் தான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

By admin