• Thu. Jul 23rd, 2026

24×7 Live News

Apdin News

நீலகிரி: பூஞ்சை ஈக்கள் படையெடுப்பால் சாப்பிட கூட முடியவில்லை என மக்கள் அவதி

Byadmin

Jul 23, 2026


நீலகிரி: பூஞ்சை ஈக்கள் படையெடுப்பால் மக்கள் அவதி, கடைகளை அடைக்கும் வியாபாரிகள்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

நீலகிரி மாவட்டத்தின் குன்னூர், சேலாஸ், கோத்தகிரி, ஜக்கனாரை, அரவேணு, கோடமலை உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக ஆயிரக்கணக்கான சிறிய ஈக்கள் கூட்டமாகப் பரவி, மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்து வருகின்றன.

வீடுகள், கடைகள் மற்றும் உணவகங்களுக்குள் புகுந்துவிடும் இந்தப் பூச்சிகளால் உணவு தயாரிப்பது, சாப்பிடுவது, கடைகளை நடத்துவது அனைத்துமே சிரமமாகியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

இவற்றைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சேலாஸ் பகுதியில் ஜூலை 22ஆம் தேதி கடையடைப்புப் போராட்டமும் நடத்தப்பட்டது.

இந்தப் பூச்சிகள் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ‘கருப்பு ஈக்கள்’ அல்ல என்றும், ‘சையாரிடே’ (Sciaridae) குடும்பத்தைச் சேர்ந்த ‘கருஞ்சிறகு பூஞ்சை ஈக்கள்’ (Dark-winged fungus gnats) என்றும் பூச்சியியல் வல்லுநர்களும் உயிரியலாளர்களும் பிபிசியிடம் தெரிவித்தனர்.

இவற்றால் மனிதர்களுக்கு நேரடியான உயிரியல் ஆபத்து இல்லை. இவை நஞ்சையும் வெளியிடுவதில்லை. ஆனால் அதிவேகமாக இனப்பெருக்கம் செய்வதால், பெரும் எண்ணிக்கையில் தோன்றி மக்களுக்குக் கடுமையான இடையூறுகளை விளைவிப்பதாகத் தெரிவித்தனர்.

By admin