• Wed. Jun 3rd, 2026

24×7 Live News

Apdin News

டெல்லி உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழப்பு

Byadmin

Jun 3, 2026


டெல்லி உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழப்பு

பட மூலாதாரம், ANI

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக, தெற்கு டெல்லியில் உள்ள டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (DDMA) சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட்(SDM) ஜிதேந்திர குமார், நான்கு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தில் 7 முதல் 8 பேர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அனைத்துப் பிரிவுகளும் உடனடியாகச் செயல்படுத்தப்பட்டதாக ஜிதேந்திர குமார் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என பிரதமரின் அலுவலகம் (PMO), எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் அறிவித்துள்ளது.

By admin