• Fri. Jul 24th, 2026

24×7 Live News

Apdin News

டெல்லி சிஜேபி போராட்டம்: பேச்சுவார்த்தை முடிவில் ஜே.பி.நட்டா அளித்த வாக்குறுதி என்ன?

Byadmin

Jul 24, 2026


மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையின் முடிவில் சிஜேபி-க்கு ஜே.பி.நட்டா அளித்த உறுதி என்ன?

பட மூலாதாரம், PTI

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

காக்ரோச் ஜனதா கட்சி முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்குப் பதிலளிக்க மத்திய அரசு நாளை வரை அவகாசம் கோரியுள்ளது. டெல்லியில் அரசியலமைப்புச் சட்ட மன்றத்தில் அந்தக் கட்சியின் தலைவர்களுக்கும் மத்திய அரசுப் பிரதிநிதிகளுக்கும் இடையே நடந்த சந்திப்புக்குப் பிறகு சி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் இதைத் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர் அரசுத் தரப்பில் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். காக்ரோச் ஜனதா கட்சி தரப்பில் அதன் செய்தித் தொடர்பாளர்களான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா கலந்துகொண்டனர்.

சுமார் இரண்டு மணிநேரம் நடந்த சந்திப்பின்போது, காக்ரோச் ஜனதா கட்சி தனது முக்கியக் கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்தது.

குறிப்பாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவராகப் பதவி விலக வேண்டும் அல்லது அவர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்பது அதன் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்று.

இந்த சந்திப்புக்குப் பிறகு பேசிய சி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா, “தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் அல்லது அவர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த நாட்டின் கருத்தாக இருப்பதாக” கூறினார்.

By admin