தலைநகர் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெறவிருந்த பேரணிக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகளும் காவல்துறையின் அதிரடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
போராட்டம் காரணமாக டெல்லி சுமார் 25,000 முதல் 30,000 வரையிலான காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், முக்கியச் சாலைகளில் பலத்த தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.
காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே, நேஹா போரா, பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் மற்றும் துருவ் ராத்தி உள்ளிட்ட பலரும் காவல்துறையினரால் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களும் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளைச் சேகரிக்கச் சென்ற ‘நியூஸ்லாண்ட்ரி’ ஊடகத்தின் செய்தியாளர்கள் தற்காலிகமாகக் காவலில் வைக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டனர். அதேபோல், பங்களா சாகிப் குருத்வாரா பகுதியில் தஞ்சம் புகுந்த போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்தத் தொடர் கைது நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் விடுதலை செய்யாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தப்போராட்டம் தொடர்பாக காலை முதல் நடந்த நிகழ்வுகளை விளக்கும் புகைப்பட தொகுப்பு.
பட மூலாதாரம், Arun SANKAR / AFP via Getty Images
பட மூலாதாரம், Arun SANKAR / AFP via Getty Images
படக்குறிப்பு, காக்ரோச் ஜனதா கட்சியின் அழைப்பை ஏற்று, சனிக்கிழமையன்று நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியை நோக்கிச் செல்ல முயன்றனர். அப்போது, பல இடங்களில் டெல்லி காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே காரசாரமான மோதல்கள் வெடித்தன.
பட மூலாதாரம், Arun SANKAR / AFP via Getty Images
படக்குறிப்பு, பங்களா சாகிப் குருத்வாரா அருகே தங்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதாகப் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பட மூலாதாரம், Arun SANKAR / AFP via Getty Images
பட மூலாதாரம், Arun SANKAR / AFP via Getty Images
பட மூலாதாரம், Prakash Singh/Bloomberg via Getty Images
படக்குறிப்பு, போராட்டங்கள் காரணமாக டெல்லியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்புப் பணியில் ஏராளமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், டெல்லிக்குச் செல்லும் டஜன் கணக்கான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, பல மெட்ரோ நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
பட மூலாதாரம், Reuters
பட மூலாதாரம், Arun SANKAR / AFP via Getty Images
பட மூலாதாரம், Reuters
பட மூலாதாரம், EPA
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, காவல்துறையால் காவலில் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, வாகனம் ஒன்றிலிருந்து வெளியே உற்றுநோக்கும் போராட்டக்காரர் ஒருவர்.
படக்குறிப்பு, ஜந்தர் மந்தர் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் சற்று ஓய்வெடுக்கும் தருணம்.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, காவலில் வைக்கப்பட்டவர்கள் குறித்து டெல்லி காவல்துறை இதுவரை எந்தக் தகவலும் தெரிவிக்கவில்லை