• Fri. Sep 20th, 2024

24×7 Live News

Apdin News

டைட்டானிக்: டைட்டன் நீர்மூழ்கியில் கிடைத்த கடைசி தகவல் என்ன? விபத்து எப்படி நடந்தது?

Byadmin

Sep 19, 2024


டைட்டானிக்: டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்குள்ளானது எப்படி? அதில் கிடைத்த கடைசி தகவல் என்ன?

பட மூலாதாரம், OCEAN GATE

  • எழுதியவர், சாம் கப்ரால்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

டைட்டன் நீர்மூழ்கியில் இருந்த குழுவினர் கடைசியாக வெளியிட்ட தகவல் என்னவென்பது தற்போது வெளியாகியுள்ளது.

டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். ஐந்து பேர் கொண்ட அந்தக் குழு, விபத்து ஏற்படுவதற்கு முன்னதாக வெளியிட்ட இறுதிச் செய்திகளில் ஒன்று, “இங்கே எல்லாம் நன்றாக இருக்கிறது” என்பதுதான். இது ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்க கடலோரக் காவல் படையின் ஆய்வாளர்கள், டைட்டனுக்கும் அதன் மூலக்கப்பலுக்கும் (mother ship) இடையிலான இறுதி தகவல் தொடர்புகளில் ஒன்றாக இந்த செய்தி இருந்ததாகக் கூறினர்.

டைட்டன் நீர்மூழ்கியின் உள்ளே இருந்து வெடிப்பு (implosion) நிகழ்ந்ததைத் தொடர்ந்து டைட்டனின் பின்புற வால் கூம்புப் பகுதி கடல் அடி மட்டத்தில் தங்கியது. இந்தப் படங்கள் முதல்முறையாக ஆய்விற்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது. ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனம் மூலம் இந்தப் படங்கள் எடுக்கப்பட்டன.

By admin