0
கனடா – டொரொண்டோ கிழக்கு நகரில் உள்ள அடுக்குமாடி வீடொன்றில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
70 வயதுடைய ஆண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். அத்துடன், 70 வயது பெண் ஒருவர் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் ஒருவரும் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடுக்குமாடி கட்டடத்தின் நான்காவது மாடியில் கடும் புகை வெளியாகியமையைக் கண்டதாகவும், ஒருவர் மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் பொலிஸ் உறுதிப்படுத்தினர்.
சம்பவ இடத்தில் விசாரணை நடத்த தீ பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.