• Fri. Jul 18th, 2025

24×7 Live News

Apdin News

ட்ரூஸ் மக்களுக்காக சிரியா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் – யார் இவர்கள்?

Byadmin

Jul 18, 2025


காணொளிக் குறிப்பு, ட்ரூஸ் சிறுபானையின மக்களுக்காக சிரியா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்- யார் இவர்கள்?

ட்ரூஸ் மக்கள் யார்? இவர்களுக்காக இஸ்ரேல் ஏன் சிரியாவை தாக்கியது?

சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தி இருக்கிறது. அங்குள்ள சிறுபான்மையின ட்ரூஸ் மக்களை பாதுகாக்க முயற்சிப்பதாகை தனது தாக்குதல் குறித்து இஸ்ரேல் கூறுகிறது.

யார் இந்த ட்ரூஸ் சிறுபானையின மக்கள்? இவர்களுக்காக சிரியா மீது இஸ்ரேல் தற்போது தாக்குதல் நடத்தியது ஏன்?

கடந்த ஞாயிற்றுக்கிழமை, சிறுபான்மையின ட்ரூஸ் சமூகத்தைச் சேர்ந்த வணிகர் ஒருவர் கடத்தப்பட்டதாக கூறப்பட்டதிலிருந்து, தெற்கு சிரியாவில் ட்ரூஸ் போராளிகளுக்கும் சுன்னி பெடோயின் பழங்குடியினருக்கும் இடையே கடும் மோதல்கள் தொடர்ந்தன.

ஜூலை 15ஆம் தேதி இந்த விவகாரத்தில் ராணுவ நடவடிக்கை மூலம் தலையிட்ட இஸ்ரேல், சிறுபான்மையின ட்ரூஸ் மக்களைப் பாதுகாக்கவும், சுவைடாவில் அவர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் அரசு ஆதரவு படைகளை அழிக்கவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்தது.

சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை முதல் சுவைடா நகரில் மட்டும் 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த உயிரிழப்புகள், இஸ்ரேலின் தாக்குதல் போன்றவை சிரியாவின் பாதுகாப்பு குறித்த அச்சங்களை மீண்டும் எழுப்பியுள்ளன. தற்போது நாட்டை வழிநடத்தும் முன்னாள் ஜிகாதி தலைவர் அஹ்மத் அல்-ஷரா, சிரியாவில் உள்ள சிறுபான்மையினங்களை பாதுகாப்பதாக உறுதியளித்துள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin