• Thu. May 14th, 2026

24×7 Live News

Apdin News

தங்கமும், வைரமும் நிறைந்திருந்த சோம்நாத் கோவில் – கஜினி முகமது படையெடுப்பின் போது என்ன நடந்தது?

Byadmin

May 14, 2026


சோம்நாத் கோவில்

பட மூலாதாரம், @narendramodi

படக்குறிப்பு, சோம்நாத் கோவிலின் இந்தப் புகைப்படத்தை பிரதமர் நரேந்திர மோதி திங்கள் கிழமையன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்

    • எழுதியவர், திரிபுவன்
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

மே 11 அன்று குஜராத்தின் பிரபாஸ் படானில் உள்ள சோம்நாத் கோவிலில் நடைபெற்ற சோம்நாத் அமிர்த மஹோத்சவத்தில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றார்.

குஜராத்தில் உள்ள சோம்நாத் கோவிலின் 75வது ஆண்டைக் குறிக்கும் வகையில், அங்கு பிரதமர் மோதி மகா பூஜை மற்றும் கும்பாபிஷேகம் நடத்தினார். தனது உரையில், சோமநாதரை இந்தியாவின் “தளராத நம்பிக்கை” மற்றும் “நாகரிகத் தொடர்ச்சியின்” அடையாளமாக மோதி விவரித்தார்.

சோமநாதரின் வரலாறு என்பது வெறும் அழிவின் வரலாறு மட்டுமல்ல, அது ஒவ்வோர் அழிவுக்குப் பின்னரும் மறுசீரமைப்பு மற்றும் உயிர்த்தெழுதல் குறித்த இந்திய உணர்வின் வரலாறு என்று அவர் கூறினார்.

சுதந்திரத்திற்குப் பிறகு சர்தார் வல்லபாய் பட்டேலின் முயற்சியால் சோம்நாத் கோவில் புனரமைக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட இக்கோவில் 11 மே 1951 அன்று அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்தால் திறந்து வைக்கப்பட்டது.

இந்திய வரலாற்றாசிரியர்கள் மட்டுமன்றி, அரபு வரலாற்றாசிரியர்களும் சோம்நாத் கோவிலை “அசாதாரணமான செல்வம் மிக்கது”, “கற்பனைக்கு எட்டாதது” மற்றும் “ஈடுஇணையற்றது” என்று விவரித்துள்ளனர்.

By admin