• Thu. May 14th, 2026

24×7 Live News

Apdin News

21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது -டாஸ்மாக்

Byadmin

May 14, 2026


தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைப் பணியாளர்களுக்கு நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாடிக்கையாளரின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால் ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்ற ஏதேனும் உரிய ஆவணங்களை சரிபார்த்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 வயதுக்கு குறைந்தோருக்கு மது விற்றால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

By admin