2
‘குபேரா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘ D 54 ‘என தற்காலிகமாக பெயரிடப்பட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.
‘போர் தொழில்’ எனும் வெற்றி பெற்ற படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் தனுஷ் மமீதா பைஜூ , கே. எஸ். ரவிக்குமார், கருணாஸ், ஜெயராம் சுராஜ் வெஞ்சரமூடு , பிருத்வி பாண்டியராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள் .
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டொக்டர் ஐசரி கே .கணேஷ் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. பிரம்மாண்டமாக நடைபெற்ற தொடக்க விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதனிடையே தனுஷ் நடிப்பில் வெளியான : குபேரா’ திரைப்படம் தமிழில் எதிர்பார்த்த அளவிற்கு வணிக ரீதியான வெற்றியை பெறவில்லை என்பதும், தனுஷின் இயக்கத்தில் தயாராகும் ‘இட்லி கடை’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.