• Tue. Jul 15th, 2025

24×7 Live News

Apdin News

தமிழகம் முழுவதும் 33 போலீஸ் அதிகாரிகள் மாற்றம் | 33 police officers transferred across Tamil Nadu

Byadmin

Jul 15, 2025


சென்னை: தமிழகம் முழுவதும் 33 போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். சேலத்துக்கு புதிய காவல் ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக உள்துறை செயலர் தீரஜ் குமார் பிறப்பித்த உத்தரவு: சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய ஐஜியாக இருந்த மகேந்தர் குமார் ரத்தோட், டிஜிபி அலுவலக தலைமையிடத்து ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐஜி அனில் குமார் கிரி, சேலம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள் ளார். சென்னை பெருநகர காவல் நுண்ணறிவு பிரிவு இணை ஆணையர் தர்மராஜன், வேலூர் சரக டிஐஜியாக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

சிறப்பு பிரிவு எஸ்பி சிஐடி அருளரசு தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பியாகவும், சென்னை பாதுகாப்பு பிரிவு துணை ஆணையர் சுஜித் குமார், கோயம்பேடு துணை ஆணையராகவும், அண்ணாநகர் காவல் மாவட்ட துணை ஆணையர் புக்யா சினேக பிரியா, தேனி எஸ்பியாகவும், கொளத்தூர் துணை ஆணையர் பாண்டிய ராஜன், பழனி பட்டாலியன் கமாண்டண்ட் எஸ்பியாகவும், கோயம்பேடு துணை ஆணையர் அதிவீரபாண்டியன், காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னை தெற்கு போக்குவரத்து காவல் துணை ஆணையர் குமார் கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணை யராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தீரஜ்குமார் உத்தரவில் தெரிவித்துள்ளார். சர்ச்சையில் சிக்கியவர்கள் அண்மையில், திருமலா பால் நிறுவன பண மோசடி வழக்கில் அந்நிறுவன கருவூல மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் போலீஸ் மீது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜன், அவர் சார்ந்த கொளத்தூர் காவல் மாவட்ட பணியை மேற்கொள்ளாமல், காவல் ஆணையர் அலுவலகத்தில் தினமும் ஆஜராகி வந்தார். இதேபோல், கோயம்பேடு காவல் துணை ஆணையராக இருந்த அதிவீரபாண்டியன், பெண் ஒருவர் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்காமல் சர்ச்சையில் சிக்கினார். தற்போது இரு வரும் மாற்றப்பட்டுள்ளனர்.



By admin