• Sat. Oct 3rd, 2026

24×7 Live News

Apdin News

தமிழக இளைஞரை காதல் மணம் புரிந்த இலங்கைத் தமிழ் பெண்ணுக்கு என்ன சிக்கல்?

Byadmin

Oct 3, 2026


இலங்கை, தமிழ்நாடு, திருச்சி

எட்டு வார கர்ப்பிணியாக இருக்கும் இலங்கைப் பெண்ணை இந்தியாவில் இருந்து நாடு கடத்தும் முடிவுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி தடை விதித்துள்ளது.

‘சட்டரீதியாகப் பார்த்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு திருமண வடிவத்தின் கீழும் தம்பதியினரின் திருமணம் வரவில்லை. ஆனால், இந்த உறவைச் சிதைப்பதற்கு நீதிமன்றம் விரும்பவில்லை’ என, தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டது.

திருச்சியில் வசிக்கும் இளைஞரை திருமணம் செய்துவிட்டதால் அதனை அங்கீகரித்து சான்றிதழ் வழங்குவதற்கு பத்திரப் பதிவுத் துறைக்கு உத்தரவிடுமாறு இலங்கைப் பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகாவில் உள்ள கொன்னைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். கடந்த ஆண்டு இலங்கையில் உள்ள உணவு விடுதி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த மே மாதம் 14-ஆம் தேதி இவர் இந்தியாவுக்கு வந்துள்ளார். அவருடன் சுற்றுலா விசாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பவித்ரா கீத்தீஸ்வரன் என்பவரும் வந்துள்ளார்.

By admin