• Sat. Oct 3rd, 2026

24×7 Live News

Apdin News

பத்தினியார்மகிழங்குளத்தில் சத்தியலிங்கம் எம்பியின் நிதியில் நெல் உலர்த்தும் தளத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Byadmin

Oct 3, 2026


வவுனியா மாவட்டத்தில் தாண்டிக்குளம் கமக்காரர் அமைப்பின் கீழ் பத்தினியார்மகிழங்குளத்தில் நெல் உலர்த்தும் தளம் அமைக்க இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் 2026ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் 1.1 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது.

குறித்த ஒதுக்கீட்டின் கீழான தளம் அமைத்தலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தாண்டிக்குளம் கமக்காரர் அமைப்பின் தலைவர் தலைமையில் வெள்ளிக்கிழமை (02) பத்தினியார்மகிழங்குளத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் அதிதியாக கலந்துகொண்டு சம்பிரதாயபூர்வமாக அடிக்கல் நாட்டி வைத்தார்.

இதன்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் நா.சேனாதிராசா, வவுனியா மாவட்டக்கிளை செயலாளர் ந.கருணாநிதி, தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் செயலாளர் மு.விஜயகாந்தன், தாண்டிக்குளம் கமக்காரர் அமைப்பினர், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

The post பத்தினியார்மகிழங்குளத்தில் சத்தியலிங்கம் எம்பியின் நிதியில் நெல் உலர்த்தும் தளத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு appeared first on Vanakkam London.

By admin