• Thu. Apr 23rd, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாடு வெல்லும் – வாக்களித்தபின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

Byadmin

Apr 23, 2026


தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காலையிலேயே வரிசையில் நின்று மக்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.

சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி, மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகள், பேரனுடன் வாக்களிக்க வந்தார்.

வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தனது வாக்கை மு.க.ஸ்டாலின் பதிவு செய்தார். இதையடுத்து அவரது மனைவி துர்கா ஸ்டாலின், பேரன் இன்பநிதி, மருமகள் கிருத்திகா, மகன் உதயநிதி ஸ்டாலின் அனைவரும் வாக்கை பதிவு செய்தனர்.

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

தமிழ்நாடு வெல்லும்.

தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று கூறினார்.

By admin