• Sat. Sep 5th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் செப்.15 முதல் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி. புக் டிஜிட்டல்மயம் – 6 முக்கிய விஷயங்கள்

Byadmin

Sep 5, 2026


செப்.15 முதல் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி. புக் டிஜிட்டல்மயம்

பட மூலாதாரம், Tamil Nadu Assembly

படக்குறிப்பு, கோப்புப் படம்

தமிழகத்தில் வரும் செப்டெம்பர் 15 ஆம் தேதியில் இருந்து ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு சான்றிதழ் உள்ளிட்ட போக்குவரத்துத்துறை சார்ந்த எந்தவொரு ஆவணமும் காகிதம் மற்றும் அட்டை வடிவில் வழங்கப்படாது, இவை அனைத்துமே இனி டிஜிட்டல் வடிவில் மட்டுமே வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

இதை பதிவிறக்கம் செய்யவும், பாதுகாக்கவும் வசதியுள்ள ஸ்மார்ட் ஃபோன் இல்லாதவர்கள், அதை பதிவிறக்கம் செய்து, அச்சிட்டு வைத்துக் கொள்ளலாம். இதனால் ஸ்மார்ட் கார்டுக்கு செலுத்தப்பட்ட ரூ.250 இனி செலுத்தத் தேவையில்லை.

ஏற்கெனவே இந்தியாவில் போக்குவரத்துத்துறை சார்ந்த அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் வடிவில் காண்பித்தால் போதுமென்ற நடைமுறையை மத்திய அரசு 4 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகம் செய்துவிட்டது. அதற்குப் பின்பும் தமிழகத்தில் ஸ்மார்ட் கார்டு ஆக இந்த ஆவணங்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் செப்டெம்பர் 15க்குப் பின்பு, முற்றிலுமாக டிஜிட்டலில் மட்டுமே இவை வழங்கப்படவுள்ளது.

போக்குவரத்துத்துறை தொடர்பான ஆவணங்களை வழங்கும் இந்த புதிய நடைமுறை பற்றி பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. அரசின் அறிவிப்பு மற்றும் போக்குவரத்துத்துறை அலுவலர்கள் பலருடைய கருத்துகளின் அடிப்படையில் இதைப் பற்றி விளக்குகிறது இந்த தொகுப்பு:

முதல்வர் விஜய் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், கடந்த செப்டெம்பர் 2 ஆம் தேதி, பேரவையில் விதி எண் 110 ன் கீழ் முதல்வர் ஜோசப் விஜய் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் வரும் செப்டெம்பர் 15 ஆம் தேதியிலிருந்து ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் ஆகியவை டிஜிட்டல் வடிவில் மட்டுமே வழங்கப்படும் என்பது முக்கிய அறிவிப்பாகும்.

By admin