• Tue. May 26th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் பயிர்க்கடன் தள்ளுபடி யாருக்கு எவ்வளவு? முழு விவரம்

Byadmin

May 26, 2026


பயிர்க்கடன் தள்ளுபடி, முதலமைச்சர் விஜய், விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் 
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் சிறு, குறு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திங்கட்கிழமை (மே 25) தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது.

  • கூட்டுறவு வங்கிகளில் இருந்து ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
  • சிறு விவசாயிகளுக்கு 50% வரை கடன் தள்ளுபடி செய்யப்படும்.
  • இந்தத் கடன் தள்ளுபடி திட்டம் 1 மே 2025 முதல் 28 பிப்ரவரி 2026 வரை (10 மாதம் மட்டும்) கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதி நிலையை கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பயிர்க்கடன் தள்ளுபடி யாருக்கு எவ்வளவு?

  • கடன் தொகை ரூ.50,000 வரை இருந்தால் குறு விவசாயிகளுக்கு முழு தள்ளுபடி செய்யப்படும்.
  • ரூ.50,001 முதல் ரூ.60,000 வரை கடன் இருந்தால் ரூ.40,000 தள்ளுபடி செய்யப்படும்.
  • ரூ.60,001 முதல் ரூ.70,000 வரை இருந்தால் ரூ.30,000 வரை தள்ளுபடி செய்யப்படும்.
  • ரூ.70,001 முதல் ரூ.80,000 வரை கடன் பெற்று இருந்தால் ரூ.20,000 வரை தள்ளுபடி செய்யப்படும்.
  • ரூ.80,001 முதல் ரூ.90,000 வரை கடன் பெற்று இருந்தால் ரூ.10,000 வரை தள்ளுபடி செய்யப்படும்.
  • ரூ.90,001 முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்று இருந்தால் ரூ.5,000 தள்ளுபடி செய்யப்படும்.

சிறு விவசாயிகள்

குறு விவசாயிகளுக்கு குறிப்பிட்ட தொகைக்கு எவ்வளவு கடன் தள்ளுபடி செய்யப்படுகிறதோ அதில் 50%, அதாவது பாதித் தொகை மட்டுமே சிறு விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்படும்.

By admin