• Tue. Apr 14th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றத்தின் பின்னணி என்ன? முன்னாள் அதிகாரிகள் கூறுவது என்ன?

Byadmin

Apr 14, 2026


தமிழ்நாட்டில் உயரதிகாரிகள் மாற்றம் உணர்த்துவது என்ன? - முன்னாள் அதிகாரிகள் கருத்து

பட மூலாதாரம், Chief_Secy_TN

படக்குறிப்பு, தலைமை செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டார்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் உட்பட அரசின் உயரதிகாரிகள் பலர் மாற்றப்பட்டுள்ளனர்.

நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு இருப்பதால் இது போன்ற மாற்றங்கள் நிகழ்கின்றன என முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி ரங்கராஜன் தெரிவிக்கையில், தேர்தலில் தொடர்பில்லாத லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி மாறுதலுக்கு உட்பட்டது ஏன் என்பதே புரியாத புதிராக உள்ளது என ஓய்வு பெற்ற கூடுதல் டிஜிபி ரவி ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நேர அதிகாரிகள் மாற்றம்: கட்சி தொடர்புடையவர்களாக அதிகாரிகள் பார்க்கப்படுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

அரசியல் கட்சிகள் புகாரும் – அதிகாரிகள் மாற்றமும்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக அரசியல் கட்சிகள் தங்களின் பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றன.

தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை ஏப்ரல் 21 மாலை 5 மணியுடன் நிறைவடையும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு பரப்புரை செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும், அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருப்பதாகவும் கூறி அவர்களை மாற்றம் செய்ய அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தொடர் புகார்களை வழங்கி வருகின்றன.

இந்தநிலையில் தமிழ்நாட்டில் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி, சென்னை மாநகர ஆணையர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.

By admin