• Tue. Apr 14th, 2026

24×7 Live News

Apdin News

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

Byadmin

Apr 14, 2026


நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் முதலாம் கட்டத்தின் கீழ் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அபாய எச்சரிக்கை அறிவித்தல் இன்று திங்கட்கிழமை (13) பிற்பகல் 04.00 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 04.00 மணி வரை அமுலில் இருக்கும் என  தெரிவித்துள்ளது.

இதன்படி கண்டி, நுவரெலியா, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இவ்வாறு முதலாம் கட்டத்தின் கீழ் ‘அவதானமாக இருக்குமாறு’ அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டம் – யட்டிநுவர பிரதேச செயலகப் பிரிவு

கேகாலை மாவட்டம் – வறகாபொல, கேகாலை மற்றும் ரம்புக்கனை பிரதேச செயலகப் பிரிவுகள்

நுவரெலியா மாவட்டம் – நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுகள்

இரத்தினபுரி மாவட்டம் – இம்புல்பே, குருவிட்ட, ஓப்பநாயக்க, பெல்மதுள்ளை மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவுகள்

By admin