• Wed. Aug 5th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் விஜய் அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் – என்ன இருக்கிறது? நேரலை

Byadmin

Aug 5, 2026


தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன்

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன்
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. சட்டப்பேரவையில் காலை 10 மணியளவில் நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்துவருகிறார்.

பட்ஜெட் உரையை தொடங்கிய அமைச்சர் மரிய வில்சன், “உயிராய் நேசிக்கும் மக்களுக்காக சரித்திர வெற்றியைப் பெற்றுள்ளார் முதலமைச்சர் விஜய். 3 மாதங்களிலேயே ஏராளமான சாதனைகளை செய்திருக்கிறார் முதலமைச்சர். சமத்துவம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட மேலான கோட்பாடுகளுடன் தொடங்கிய இந்த அரசு பலவற்றை செய்து காட்டியுள்ளது.” என்றார்.

கடந்த 3 மாதங்களில் தமிழ்நாடு அரசு அறிவித்த திட்டங்களையும் அமைச்சர் மரிய வில்சன் பட்டியலிட்டார். தொலைநோக்கு திட்டங்களை அடைவதற்கான பாதையை இந்த பட்ஜெட் வழிவகுத்து காட்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

“தமிழ்நாட்டின் நிதிநிலையை வெள்ளை அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம்.” என்றார்.

இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக அப்போதைய திமுக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தது. தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்று அரசு அமைத்ததை தொடர்ந்து தற்போது இந்த ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. தமிழக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் நாளை தாக்கல் செய்கிறார்.

By admin