• Wed. Aug 5th, 2026

24×7 Live News

Apdin News

பிரேசிலியன் பட் லிஃப்ட்: பின்புறத்தை பெரிதாக்கும் சிகிச்சை செய்த 24 மணி நேரத்தில் உயிரிழந்த 33 வயது பெண்

Byadmin

Aug 5, 2026


அலைஸ் வெப் அறுவை சிகிச்சையற்ற பிபிஎல் சிகிச்சையை மேற்கொண்டார்

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, அறுவை சிகிச்சை இல்லாத பிரேசிலியன் பட் லிஃப்ட் சிகிச்சையை மேற்கொண்ட ஆலிஸ் வெப்

2024 செப்டம்பரில், அறுவை சிகிச்சை இல்லாமல் மேற்கொள்ளப்படும் பின்புறத்தைப் பெரிதாக்கி வடிவம் தரும் முறையை (பிரேசிலியன் பட் லிஃப்ட்) செய்துகொள்ள ஆலிஸ் வெப் சென்றபோது, அது மதியத்திற்குள் முடிந்துவிடும் என்றும், அதன் பிறகு தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துவர முடியும் என்றும் அவர் நினைத்திருந்தார்.

இந்த அழகியல் சிகிச்சையில், பின்புறப் பகுதியில் அதிக அளவில் டெர்மல் ஃபில்லர்கள் ஊசி மூலம் செலுத்தப்படுகின்றன. வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு அழகு நிலையத்தின் உள்ளே தற்காலிகமாக செயல்பட்ட கிளினிக்கில் இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், 33 வயதான ஆலிஸ் வெப் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை.

ஐந்து குழந்தைகளின் தாயான அவர், சிகிச்சை மேற்கொண்ட 24 மணி நேரத்திற்குள் உயிரிழந்தார். அறுவை சிகிச்சை இல்லாமல் மேற்கொள்ளப்படும் பின்புறத்தைப் பெரியதாக்கும் முறைக்கு பிறகு உயிரிழந்த முதல் நபராக அவர் பிரிட்டனில் அறியப்படுகிறார்.

அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்தப்பட உள்ளது.

By admin