• Mon. May 11th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான அரசில் இடம் பெற்றுள்ள 9 அமைச்சர்கள் யார்? முழு பின்னணி

Byadmin

May 11, 2026


அமைச்சர் கீர்த்தனா

பட மூலாதாரம், DIPR

படக்குறிப்பு, கீர்த்தனா

தமிழ்நாட்டில் விஜய் தலைமையில் பதவியேற்றுள்ள புதிய அரசில் அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், சிடிஆர் நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 பேர் அமைச்சர்களாகியுள்ளனர். அவர்களின் பின்னணி என்ன?

ஆனந்த்

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (வயது 61), 2006 ஆம் ஆண்டு நடந்த புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் புஸ்சி தொகுதியில் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் வேட்பாளராக நின்று வெற்றி பெற்றதால் புஸ்சி ஆனந்த் என்று அழைக்கப்படுகிறார். வேட்புமனுவில் அவர் தாக்கல் செய்த விவரங்களின்படி, அவர் எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறார்.

புதுச்சேரி விஜய் ரசிகர் மன்றத்தின் கெளரவச் செயலாளராக இருந்த ஆனந்த், புதுச்சேரி புஸ்சி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான பின்னும் விஜய் ரசிகர் மன்றத்தின் பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார். அதனால் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு அறிமுகமாகி, பின்பு விஜய்க்கும் நெருக்கமானார். அதன்பின் அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளர், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் என பல பதவிகளை வகித்த அவர், தமிழகத்துக்குக் குடிபெயர்ந்தார்.

ஆனந்த்

பட மூலாதாரம், DIPR

விஜய் கட்சி துவங்கியவுடன் தனது குடியிருப்பை, செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்கு மாற்றிய ஆனந்த், தமிழக வாக்காளர் பட்டியலில் தனது பெயரை சேர்த்துக்கொண்டார். ரசிகர் மன்றத்தில் பொறுப்பில் இருந்தபோதும், தவெக துவக்கப்பட்ட பின்பும் விஜய் சார்பில் மன்ற நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து விஜய் கூறும் தகவல்களைத் தெரிவிக்கும் நிலைக்கு உயர்ந்தார்.

By admin