• Sat. Sep 21st, 2024

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் 8 கோடி பேரில் 5.6 கோடி முத்ரா கடன் எப்படி சாத்தியம்? மத்திய நிதியமைச்சகம் விளக்கம்

Byadmin

Sep 14, 2024


முத்ரா கடன், நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (கோப்புப் படம்)

தமிழ்நாட்டில் 5.6 கோடி முத்ரா கடன்களும், கோவையில் மட்டும் 20 லட்சம் முத்ரா கடன்களும் வழங்கப்பட்டிருப்பதாக கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் கூறியிருந்தார். சுமார் 8 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் 5.6 கோடி முத்ரா கடன்களும், சுமார் 35 லட்சம் பேர் மட்டுமே வசிக்கும் கோவையில் 20 லட்சம் முத்ரா கடன் கணக்குகளும் எப்படி சாத்தியம்? என்ற கேள்விகள் எழுந்தன.

அதுகுறித்த பிபிசி தமிழ் கேள்விக்கு மத்திய நிதியமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.

நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், செப்டெம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில், கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

முதல் நாளில், கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த நுாற்றுக்கும் அதிகமான தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள், சிறுகுறு தொழில் மற்றும் சிறு வணிகர்கள் அமைப்பினர் என பல தரப்பினருடன் கலந்துரையாடினார். கோவை கொடிசியாவில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தொழில் முனைவோர் மத்தியில் நிர்மலா சீதாராமன் பேசுகையில், முத்ரா யோஜனா கடன் கணக்குகள் மற்றும் வழங்கப்பட்டுள்ள கடன் தொகை குறித்து சில புள்ளி விபரங்களைத் தெரிவித்தார்.

By admin