• Mon. Aug 17th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டுக்கு முழு தண்ணீரும் வழங்கப்படும்.. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்த கர்நாடகா

Byadmin

Aug 17, 2026


கர்நாடகா தரப்பு

இந்த சூழலில் இன்றைய விசாரணையில் கர்நாடகா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், தமிழகத்திற்கு நாள்தோறும் 12,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீரை திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு பின்பற்றும் என உறுதியளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “கடுமையான சூழல் நிலவியபோதிலும், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபடி 12,000 கனஅடி தண்ணீரை தமிழகத்திற்குத் திறந்துவிடுவதை உறுதிசெய்ய முயன்றுள்ளோம்.

ஆரம்பத்தில் சில நாட்களில் திறந்துவிடப்பட்ட நீரின் அளவு 6,000 கனஅடியாக குறைந்திருந்தாலும், தட்டுப்பாட்டை சரிசெய்து வரும் நாட்களில் முழு அளவிலான தண்ணீரும் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

By admin