• Sun. Jul 27th, 2025

24×7 Live News

Apdin News

தலையில் அதிகமாக எண்ணெய் வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

Byadmin

Jul 26, 2025


தினமும் தலைமுடியில் அதிக அளவில் எண்ணெய் தேய்த்தாலும் பிரச்சனைகள் ஏற்படும். அதிக எண்ணெய் மயிர்க்கால்களை அடைத்துவிடும். இதனால் தலைமுடி நன்றாக வளர்வதில் தடை ஏற்படும். அதிக எண்ணெய் தலையில் இருக்கும்போது தூசியும், அழுக்கும் அதிகமாக தலையில் சேரும். இதனால் தலையில் அரிப்பு, சொரிதல் போன்றவை ஏற்படும். சிலசமயம் அதிக எண்ணெய் தலைமுடியில் பொடுகை அதிகமாக்கி விட்டுவிடும்.

தலைக்கு தேய்க்கும் எண்ணெயில் முதலிடத்தில் இருப்பது அன்றும் சரி, இன்றும் சரி மரச்செக்கு தேங்காய் எண்ணெய்தான். சிறிதளவே எண்ணெய் எடுத்துக்கொண்டு நன்றாக தலை முழுவதும் படும்படி தேய்த்து நன்றாக மசாஜ் செய்யவும். மணிக்கணக்கில் தலையில் எண்ணெய்யை ஊற விடாமல் தலைமுடியை எண்ணெய் பிசுக்கு நன்கு போகுமாறு கழுவி விடவும்.

தலையில் மேலோட்டமாக எண்ணெய் தேய்ப்பதால் எந்தவித உபயோகமும் இல்லை. தலைமுடியின் அடியில் படும்படி நன்கு தேய்க்க வேண்டும். அதன்பின் குளிக்க வேண்டும்.

அந்த காலத்தில் கிராமப்புறங்களில் தலையில் எண்ணெயை ஊற்றி நன்றாக தேய்த்து மசாஜ் செய்து கொஞ்ச நேரம் ஊற வைத்து பின் ஆற்றிலோ, குளத்திலோ அல்லது கிணற்றிலோ நன்கு குளித்துவிட்டு வந்து அன்றைக்கு தயாரிக்கப்பட்டிருக்கும் ‘சிறப்பு சாப்பாடு’ சாப்பிட்டு முடித்தால், அதனால் உண்டாகும் மயக்கத்தில் ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்தால் அது ஒரு சந்தோஷமான மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.

By admin