தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ கைது குறித்து மு.க .ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
தவெக எம்எல்ஏ கைது
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரான பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்திக்கு வாட்ஸ்அப் செய்திகள் அனுப்பிய புகாரில் 116 நாட்கள் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்; ஐஜி என். காமினி விசாரணையைக் கண்காணிக்கிறார். மேலும், போஷ் (POSH) சட்டத்தின் கீழ் விசாரிக்க நான்கு உறுப்பினர்கள் கொண்ட உள் புகார் குழுவையும் தமிழக அரசு அமைத்திருந்தது.
இந்த நிலையில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்புதல், பணியிடத்தில் வேலையை செய்ய விடாமல் தொந்தரவு செய்தல் ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க ஸ்டாலின் தவெக எம்.எல்.ஏ கைது குறித்து கருத்து தெரிவித்துள்ளார. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து, அவரைப் பாதுகாக்க பொய் மேல் பொய்களைக் கூறினார்கள்.அமைச்சர்கள் முதல் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் வரை வரிந்து கட்டிக் கொண்டு புகாரை மறுத்து, அருள் விக்னேஷுக்கு Conduct Certificate வழங்கும் வேலையில் இறங்கினார்கள்.
பாதிக்கப்பட்ட அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரம் மேற்கொண்டார்கள்.
அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு, அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப் புகார் அளித்தார்.
தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படும் வரை ஓயமாட்டோம்
உயர்நீதிமன்றம், மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தால் வேறு வழியின்றி இப்போது TVK MLA கைது செய்யப்பட்டிருக்கிறார்.
119 நாட்களாக இதில் நடவடிக்கை எடுக்காமல், சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும்.சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்
என்று குறிப்பிட்டுள்ளார்