• Tue. May 12th, 2026

24×7 Live News

Apdin News

தவெகவின் ‘இருமுனைக் கத்தி’ சமூக ஊடக பிரசாரம் ஆட்சியை கைப்பற்ற உதவியதா?

Byadmin

May 12, 2026


தவெக, சமூக ஊடகம், டிஜிட்டல் பரப்புரை

பட மூலாதாரம், X/Rahul Gandhi

“மை டியர் விர்ஷுவல் வாரியர்ஸ்” தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு ஆற்றிய உரையில் கவனம்பெற்ற வரி இது.

தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவாக சமூக ஊடகம் மற்றும் இணைய வெளியில் வேலை செய்பவர்களைச் சுருக்கமாக விர்ஷுவல் வாரியர்ஸ் (இணையப் போராளிகள்) என விஜய் விளிக்கிறார்.

விஜய் தனது உரையின் இறுதியில் முக்கியமாக இரு தரப்புக்கு தனியாக நன்றி தெரிவித்தார்.

”குட்டி நண்பா, நண்பீஸ். அவங்களாலதான் இது நடந்திருக்கு. உங்களுக்கு நன்றிக்கடன் செய்யனும், உங்களுடைய எதிர்காலத்தை மனசுல வச்சுக்கிட்டு எல்லா நல்ல விஷயங்களையும் இந்த விஜய் மாமா செய்து கொடுப்பான்.” எனத் தெரிவித்தார் விஜய்.

அதனைத் தொடர்ந்து பேசிய விஜய், “உங்களை எப்படி மறப்பேன், நீங்க தான் என்னோட உயிராச்சே, உண்மையைச் சொல்லனும்னா நீங்க இல்லாம எதுவுமே இல்லை. தமிழக வெற்றிக் கழகத்தின் தோழர்களே, நீங்கள் இல்லனா எதுவுமே இல்லை. என்னுடைய கழக தோழர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் வாக்குச்சாவடி முகவர்களுக்கும், மை டியர் விர்ஷுவல் வாரியர்ஸ். உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்” என்றும் தெரிவித்தார்.

By admin