கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், காவல்துறையின் மூலமாக பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக கூறி முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையினரையும், அவர்கள் ஆற்றும் மக்கள் பாதுகாப்பு பணிகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் பேசி, அவ்வழக்கின் விசாரணையை திசைதிருப்பும் நோக்கில் செயல்படும் பொய்த்துறைக்கென்றே பிரத்யேகமாக நியமிக்கப்பட்டவராக சொல்லப்படும் அமைச்சரின் அரைவேக்காட்டுத் தனத்தை உண்மையான முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் கண்டும் காணாமல் இருப்பதன் மர்மம் தான் என்ன ?
ரீல்ஸ் கண்டென்ட்
வாணியம்பாடியில் ஆடு திருட்டு வழக்கில் தொடர்புடையவருக்கு அரசு வழக்கறிஞர் பதவி, அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க சொந்தக் கட்சி நிர்வாகிகளிடமே வசூல் வேட்டை என அடுத்தடுத்து புகார்கள் ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகளாக வருவது, தூயசக்தி எனும் பெயரில் மறைந்திருக்கும் ஊழல் சக்திகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன.
குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரீல்ஸ் கண்டெண்டுக்கு ஏற்றவகையில் பொதுவெளியில் கர்ஜித்துவிட்டு, தற்போது அதற்கு முரணாக குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களையும், லஞ்சப் பணம் கொடுப்பவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக நியமிப்பதன் மூலம், ஏற்கனவே தங்களால் வெள்ளாவி வைத்து வெளுக்கப்பட்ட ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை தவெக அரசும், அதன் முதலமைச்சரும் பாதுகாக்க முனைகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.