• Sat. Jul 4th, 2026

24×7 Live News

Apdin News

இரான் முன்னாள் அதிஉயர் தலைவர் காமனெயி உடல் இராக் எடுத்துச் செல்லப்படுவது ஏன்? முழு விவரம்

Byadmin

Jul 4, 2026


இரான், ஆயதுல்லா அலி காமனெயி, இறுதிச் சடங்கு, தெஹ்ரான்

பட மூலாதாரம், Anadolu via Getty Images

படக்குறிப்பு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த ஆயதுல்லா அலி காமனெயி மற்றும் அவரது குடும்பத்தினரின் இறுதிச் சடங்கு தொடங்கியது.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட இரான் முன்னாள் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது. அவர்கள் கொல்லப்பட்டு நான்கு மாதங்கள் கழித்து இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.

இறுதிச் சடங்கிற்கான அட்டவணை ஜூன் 13-ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி ஜூலை 3 முதல் ஜூலை 9 வரை இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. ஜூலை 4-ஆம் தேதி நடைபெறும் அஞ்சலி நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிபிசி உருது வழங்கும் தகவல்களின்படி, தெஹ்ரானில் உள்ள மிகப்பெரிய மத மற்றும் கலாசார மையமான இமாம் கொமெனி மசூதியில் இறுதிச் சடங்குகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. இறுதிச் சடங்கிற்கு முந்தைய நிகழ்ச்சியில் கருப்பு உடை அணிந்து மக்கள் கலந்து கொண்டனர்.

வெள்ளிக்கிழமை அலி காமனெயி மற்றும அவரது மூன்று குடும்ப உறுப்பினர்களின் உடல்கள் இரான் கொடி போர்த்தப்பட்டு கிராண்ட் மொசல்லா மசூதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சிவப்பு மலர்களுக்கு இடையே சவப்பெட்டி வைக்கப்பட்ட நிலையில் வெள்ளை நிற பட்டாம்பூச்சிகள் காற்றில் பறந்து கொண்டிருந்தன.

இந்த இறுதி வழியனுப்பும் நிகழ்ச்சிகளை இரான் ஒரு மதச் சடங்காக மட்டும் பார்க்கவில்லை. போருக்குப் பிந்தைய அதன் அரசியல் மற்றும் ராஜாங்க சக்தியின் வெளிப்பாடாகவும் பார்க்கிறது.

By admin