பட மூலாதாரம், CMO
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணிக் கட்சிகளை ஒன்றிணைக்கும் இரண்டாவது கூட்டம் இன்று (செப்டம்பர் 9) சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்துடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. இந்தக் கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் தலைவராக முதலமைச்சர் விஜய் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “இந்தக் கூட்டத்தில், 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்பதை முதலமைச்சர் விஜய் ஏற்றுக் கொண்டாரா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த மாணிக்கம் தாகூர், “இந்தக் கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கானது. அதேநேரம், தேசிய அளவில் ‘இந்திய கூட்டணி’யின் ஓர் அங்கமாகச் செயல்படும். யார் பிரதமர் வேட்பாளர் என்பது 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் இந்தியா கூட்டணியால் முடிவு செய்யப்படும். அந்த வேட்பாளருக்கு ஆதரவாக முதலமைச்சர் விஜய் பிரசாரம் மேற்கொள்வார்” என்று கூறினார்.
தவெக-வின் பிரதமர் கனவு சாத்தியமா?
இந்தக் கூட்டத்திற்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் வேட்பாளர் வர வேண்டும் என்பது எதிர்காலத்திற்கான கனவுதான். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கனவு இருக்கும், ஒவ்வொரு கட்சிக்கும் தங்களது தலைவர்கள் தொடர்பான எண்ணங்கள் இருக்கும். அதுபோலத்தான் இதுவும். மற்றபடி, இதை குழப்பிக் கொள்ள வேண்டாம்” எனக் கூறினார்.