• Sun. Jun 14th, 2026

24×7 Live News

Apdin News

தாக்குதலை தவிர்க்க இரானுடன் ரகசிய ஒப்பந்தமா? – ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் விளக்கம்

Byadmin

Jun 14, 2026


மார்ச் 14-ஆம் தேதி, ஃபுஜைராவில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய எரிசக்தி மையம் ஒன்றின் மீது இரான் தாக்குதல் நடத்தியது.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, மார்ச் 14-ஆம் தேதி, ஃபுஜைராவில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய எரிசக்தி மையம் ஒன்றின் மீது இரான் தாக்குதல் நடத்தியது.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

அமெரிக்கத் தடைகளால் முடக்கப்பட்ட பல பில்லியன் டாலர் நிதியை விடுவிக்க இரான் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டதாக வெளியான தகவல்களை ஐக்கிய அரபு அமீரகம் முற்றிலும் மறுத்துள்ளது. இச்செய்திகள் ஆதாரமற்றவை என்று அந்த நாடு தெரிவித்துள்ளது.

இரானின் முடக்கப்பட்ட பல பில்லியன் டாலர் நிதியை விடுவிக்க ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புக்கொண்டதாகவும், ஏற்கெனவே மூன்று பில்லியன் டாலர்களை விடுவித்திருப்பதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நான்கு வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிரத்யேக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கத் தடைகளின் கீழ் வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்ட இரானின் எண்ணெய் வருவாய் தொடர்பான பல பில்லியன் டாலர் நிதியை விடுவிப்பது குறித்த விவகாரமும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் இடம்பெற்றிருக்கலாம் என்று தூதரக அதிகாரிகள் மற்றும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையில், கத்தார் மற்றும் இரான் இடையிலான ரகசிய ஒப்பந்தங்கள் குறித்தும் தகவல்கள் பரவி வருகின்றன.

இரானியத் தாக்குதல்களைத் தடுப்பதற்காகத் தெஹ்ரானுடன் கத்தார் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தகவலை ‘பொய்யானது மற்றும் நம்பகத்தன்மையற்றது’ என்று கத்தார் நிராகரித்துள்ளது. இத்தகைய செய்திகள், சமரச முயற்சியைப் பாதிக்கும் என்றும் அந்நாடு கூறியுள்ளது.

By admin