• Sun. Jun 14th, 2026

24×7 Live News

Apdin News

துலாம்- வார ராசிபலன் 14.6.2026 முதல் 20.6.2026 வரை

Byadmin

Jun 14, 2026


துலாம்

சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசிக்கும் ராசி அதிபதி சுக்கிரனுக்கு செவ்வாயின் பார்வை உள்ளது. பூர்வீகம் தொடர்பாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். முன்னோர் சொத்துக்களை பிரிப்பதில் இருந்த கருத்து வேறுபாடு மறையும். வழக்குகளில் சாதகமாக தீர்ப்பு வரும். வேலை இழப்பு ஊதியக் குறைப்பு, அதிக வேலை போன்றவற்றால் அதிருப்தி ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். 10ல் குரு வந்தால் பதவி பறிபோகும் என்பதால் சுய ஜாதக நேரம் அறிந்து தொழில் வேளையில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும்.

கோட்சாரம் சற்று சுமாராக இருக்கும் போது பிரச்சனையை விட்டு ஒதுங்கி வாழப்பழகினால் பெரிய பாதிப்பு ஏற்படாது. சுய ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருந்தால் எந்த கெடு பலனும் ஏற்படாது. 15.6.2026 அன்று காலை 8.41 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நல்லது செய்தாலும் அது தீமையாகவே முடியும் என்பதால் அடுத்தவர்களின் விசயத்தில் தலையிடுவதைத் தவிர்க்கவும். தொலைதூர பயணங்களை தவிர்க்க வேண்டும். வெள்ளிக்கிழமை சர்க்கரை பொங்கல் தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

By admin