• Tue. Sep 8th, 2026

24×7 Live News

Apdin News

‘தாத்தாவுக்கு 5 மனைவிகள், கொள்ளுத் தாத்தாவுக்கு 11 பேர்’ – பலதார மணம் குறித்த பிரபல நெட்ஃபிளிக்ஸ் தொடரின் பின்னணி

Byadmin

Sep 8, 2026


ரு கட்டத்தில், ஜோனாசியை விட்டு பிரிந்து போய்விடுவதாக மதிபா மிரட்டுகிறாள், ஆனால் அவளை சமாதானப்படுத்தி தன்னுடனேயே இருக்குமாறு அவன் சம்மதிக்க வைக்கிறான்.

பட மூலாதாரம், Netflix/ Iconic Digital

    • எழுதியவர், மேகா மோகன்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

சூ நியாதி தனது முதல் நாவலான *தி பாலிகேமிஸ்ட்* நாவலை பதிப்பகங்களுக்கு அனுப்பியபோது, திருமணமான ஜிம்பாப்வே ஆடவர் ஒருவரும், அவர் கவர்ந்திழுக்கும் பெண்களும் பற்றிய அந்தப் புத்தகத்துக்கு சந்தை இல்லை என்று பதிப்பாளர்கள் கருதியதாக அவர் கூறுகிறார்.

இதனால், ஜிம்பாப்வே எழுத்தாளரான நியாதி தனது சொந்த முயற்சியில் ஒரு தொகுப்பாசிரியர், அச்சு வடிவமைப்பாளர் மற்றும் ஓவியக் கலைஞரைத் தேர்வு செய்து, 2012-ஆம் ஆண்டு 500 பிரதிகளை வெளியிட்டார். பதிப்பாளர்களின் கணிப்புகளைப் பொய்யாக்கும் வகையில் அந்தப் புத்தகம் பெரும் வெற்றியடைந்தது.

தற்போது அந்த நாவல் நெட்ஃபிளிக்ஸ் தொடராக உருவாக்கப்பட்டுள்ளது. 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் நெட்ஃபிளிக்ஸில் அதிகம் பார்க்கப்படும் முதல் 10 தொடர்களில் இது இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. ஹாலிவுட் நடிகை தராஜி பி. ஹென்சன், இந்தத் தொடர் தன்னை “இறுக்கமாகப் பிடித்துக்கொண்டது” என்றும், 22 அத்தியாயங்களையும் ஒரே நாளில் தொடர்ந்து பார்த்து முடித்ததாகவும் கூறியுள்ளார்.

எனினும், இது பலதார மணம் குறித்த ஒரு நேரடியான கதை அல்ல என்பதை நியாதி கவனமாகச் சுட்டிக்காட்டுகிறார். பலதார மணம் என்ற பாரம்பரிய நடைமுறை அவருக்குப் புதிதானதல்ல. அவரது தாய்வழிக் குடும்பத்தில் பல தலைமுறைகளாக பலதார மணம் நடைமுறையில் இருந்து வந்துள்ளது.

1979-ஆம் ஆண்டு இறந்த அவரது தாத்தாவுக்கு ஐந்து மனைவிகள் இருந்தனர். அவரது கொள்ளுத் தாத்தாவுக்கு 11 மனைவிகள் இருந்தனர். அவரது தாத்தா திருமணம் செய்துகொண்ட முதல் மனைவியான பாட்டி, அந்தப் பெண்கள் அனைவரும் ஒன்றாக வசித்த பண்ணையின் குடும்பத் தலைவியாக இருந்தார். புதிய பெண்களை குடும்பத்தில் சேர்ப்பது குறித்த முடிவுகளை எடுப்பதிலும் அவர் அடிக்கடி உதவினார்.

By admin