• Thu. Nov 26th, 2026

24×7 Live News

Apdin News

தாமிரபரணி ஆற்றில் தங்க கட்டி மூட்டை கிடைத்ததா? சுவிஸ் முத்திரைகள், சிபிசிஐடி விசாரணை – தெரியவந்தது என்ன?

Byadmin

Nov 26, 2026


தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள இந்தப் பகுதியில் கருப்பசாமி என்பவரிடம் இருந்து சுமார் 430 கிராம் அளவிலான தங்க நகைகளைக் காவல்துறை மீட்டுள்ளது.

படக்குறிப்பு, பிடிபட்ட தங்க நகைகள்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தாமிரபரணி ஆற்றில் தங்கக் கட்டிகள் அடங்கிய மூட்டை கிடைத்ததாகப் கூறப்படும் வழக்கில் சந்தேக வளையத்தில் உள்ள ஆறு பேரிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்திவருகிறது.

“பிடிபட்ட 24 தங்கக் கட்டிகளில் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த முத்திரைகள் இடம்பெற்றுள்ளதால் கடத்தலுக்காக இவை கொண்டு வரப்பட்டிருக்கலாம்” எனக் கூறுகிறார், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர்.

திருட்டு மற்றும் திருடிய பொருட்களை தவறாகப் பயன்படுத்தியது என இரண்டு பிரிவுகளில் சிபிசிஐடி போலீஸ் வழக்குப் பதிவுசெய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 24) சிபிசிஐடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அஜய் தங்கம் தலைமையிலான போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர்.

தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள இந்தப் பகுதியில் கருப்பசாமி என்பவரிடம் இருந்து சுமார் 430 கிராம் அளவிலான தங்க நகைகளைக் காவல்துறை மீட்டுள்ளது. ஆனால், ஊடகங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

By admin