• Tue. Jun 16th, 2026

24×7 Live News

Apdin News

தாயாக விரும்பும் பெண்களை சுரண்டும் ஆண்கள் – பிபிசி புலனாய்வு

Byadmin

Jun 16, 2026


விந்து நன்கொடையாளர், இங்கிலாந்தின் கருவுறுதல் ஒழுங்குமுறை அமைப்பு, கருத்தரிப்பு, விந்தணு தானம், சமூக வலைதளங்கள்
படக்குறிப்பு, பெண்களுக்கு, சட்டவிரோத விந்து நன்கொடையாளர்களால் சுரண்டப்படும் அபாயம் இருப்பதாக இங்கிலாந்தின் கருவுறுதல் ஒழுங்குமுறை அமைப்பு எச்சரிக்கிறது

    • எழுதியவர், ஜெம்மா டன்ஸ்டன்
    • பதவி, பிபிசி வேல்ஸ் இன்வெஸ்டிகேட்ஸ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஏக்கத்தில் இருக்கும் பெண்கள், இணையதளங்கள் வாயிலாக பாலியல் ரீதியான தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அதோடு அவர்களுக்கு மலிவான மற்றும் சட்டவிரோத வழிகளில் விந்தணு மாதிரிகளும் வழங்கப்படுகின்றன.

முறையான கருவுறுதல் சிகிச்சையைப் பெற முடியாத சிலர், சமூக ஊடக தளங்களில் இதற்கான வழிகளைத் தேடுகிறார்கள். இது கட்டுப்பாடு இல்லாத மிகப் பெரிய சட்டவிரோத சந்தையை வளர்த்து வருகிறது. அதிலும் சிலர் விந்தணுக்களைத் தேடுவதற்காக, டிண்டர் போன்ற டேட்டிங் ஆப்ஸ் மற்றும் வலைத்தளங்களை நாடும் நிலைக்குக் கூட தள்ளப்படுகிறார்கள்.

பிபிசி வேல்ஸ் நடத்திய புலனாய்வில், இணையதளத்தில் தனது விந்தணுவை விளம்பரம் செய்த ஒரு நபருக்கு 100 பவுண்டுகள் பணம் செலுத்தப்பட்டது. அந்த மாதிரி, உறைந்த தக்காளி பாசாட்டா அட்டைப்பெட்டியுடன் ஒரு பெட்டியில் வைத்து அனுப்பப்பட்டது. பெண்கள் இதுபோன்ற ஏமாற்றும் நோக்கமுள்ள விந்து நன்கொடையாளர்களால் ஏமாறும் அபாயத்தில் உள்ளதாக பிரிட்டனின் கருவுறுதல் ஒழுங்குமுறை அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த புலனாய்வின் ஒரு பகுதியாக, இணையதளத்தில் விந்தணுவைப் பெறுவது எவ்வளவு எளிது என்பதைப் பார்க்க நான் களம் இறங்கினேன். தங்கள் சேவைகளை வழங்க முன்வரும் ஆண்களுக்குப் பஞ்சமே இல்லை. “ஜோ டோனர்” என்றழைக்கப்படும் நபர் தபாலில் விந்தணுவை டெலிவரி செய்வார் என்றும், அவரை நான் “நம்பலாம்” என்றும் ஓர் இணையதள விளம்பரம் எனக்குக் காட்டியது.

அவர் உலகெங்கிலும் பாலியல் உறவு மற்றும் செயற்கை கருவூட்டல் மூலம் 180 குழந்தைகளுக்குத் தந்தையாக இருப்பதாகக் கூறும் ஒரு தீவிர விந்து நன்கொடையாளர் என விளம்பரம் கூறுகிறது.

By admin