• Thu. Sep 3rd, 2026

24×7 Live News

Apdin News

தாரா சிங்: கிறிஸ்தவ மத போதகர் மற்றும் அவரின் மகன்களை கொன்றவர் விடுதலை செய்யப்படுவாரா?

Byadmin

Sep 3, 2026


தாரா சிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தனது குற்றங்களுக்காக வருந்துவதாகக் கூறி தாரா சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் வன்முறையான மரணம் தொடர்பான சில விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அவை சில வாசகர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும்.

இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையின் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களில் ஒன்று, உலகம் முழுவதும் கண்டனங்களைப் பெற்ற கால் நூற்றாண்டுக்கும் மேலான காலத்துக்குப் பிறகு மீண்டும் செய்திகளில் இடம்பெற்றுள்ளது.

1999ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கிறிஸ்தவ மதபோதகர் கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரண்டு இளம் மகன்களைக் கொலை செய்த குற்றத்துக்காக தண்டனை பெற்று சிறையில் உள்ள ஒருவரை விடுவிக்கக் கோரும் மனு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் புதன்கிழமை (செப்டம்பர் 2) முடிவெடுக்க உள்ளது.

ரவீந்திர குமார் பால் என்ற இயற்பெயர் கொண்ட தாரா சிங், 2000ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டதில் இருந்து சிறையில் உள்ளார்.

கிழக்கு மாநிலமான ஒடிசாவில் (முன்னர் ஒரிசா) ஒரு கிராமத்தில் ஆஸ்திரேலிய மதபோதகர் ஸ்டெயின்ஸையும் அவரது 6 மற்றும் 10 வயது மகன்களையும் உயிருடன் எரித்துக் கொன்றதற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

By admin