• Thu. Sep 3rd, 2026

24×7 Live News

Apdin News

நேபாளம்: ‘ஒற்றை அடி பாதையில் 20 மாடி உயரத்துக்கு ஏறி தப்பினோம்’ – மீண்டு வந்தவர்களின் அனுபவம்

Byadmin

Sep 3, 2026


நேபாள் பெருவெள்ளம்

பட மூலாதாரம், Vijaya Buvaneswari

    • எழுதியவர்,
    • பதவி, செய்தியாளர், பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நேபாள பெரு வெள்ளம் பல அடி உயர கட்டடங்களை, நூற்றுக்கணக்கான வாகனங்களை வாரி சுருட்டிக் கொண்டு பெரும் சேதத்தை ஏற்படுத்திய போதிலும், நேபாள எல்லையிலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் நின்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று நம்ப முடியாத வகையில் தப்பித்துக் கொண்டது. அதில் இருந்த 21 பேரும் இரண்டு நாள் போராட்டத்துக்குப் பிறகு, ஆபத்து இல்லாமல் தமிழகம் திரும்பி உள்ளனர்.

“எங்களுக்கு 10 அடி தூரத்தில் வெள்ளம் சீறி பாய்ந்துகொண்டிருந்தது. நாங்கள் தப்பித்து வந்தது அதிசயமே” என்கிறார் சிதம்பரத்தைச் சேர்ந்த தியாகராஜன்.

கும்பகோணம் சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலம் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக 57 பேர் ஆகஸ்ட் 23ம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டனர். அவர்கள் சென்னை, சிதம்பரம், மயிலாடுதுறை உள்ளிட்ட வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். சென்னையிலிருந்து டெல்லி சென்ற அவர்கள், அங்கிருந்து நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு சென்றனர்.

நேபாள பெருவெள்ளம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

காத்மாண்டுவிலிருந்து ஸ்யாபுருபெஸி என்ற இடத்துக்கு 57 பேரும் ஆகஸ்ட் 25ம் தேதி வந்தடைந்தனர். அன்றிரவு அங்கேயே ஓட்டலில் தங்கினர். மறு நாள் ஆகஸ்ட் 26ம் தேதி காலை அங்கிருந்து மூன்று வாகனங்களில் புறப்பட்டனர்.

அவர்கள் கெய்ரோங்-ல் உள்ள குடிவரவு அலுவலகத்தை நோக்கி புறப்பட்டனர். அங்கு அலுவல் நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு, கைலாயம் நோக்கி செல்வது அவர்களின் திட்டம்.

By admin