• Sat. Jun 6th, 2026

24×7 Live News

Apdin News

தாவா ஷெர்பா: எவரெஸ்ட் சிகரத்தில் 6 நாட்கள் உணவின்றி தனியே சிக்கிய வழிகாட்டி மீண்ட அதிசயம்

Byadmin

Jun 6, 2026


எவரெஸ்ட் சிகரத்தில் 'சாக்லேட், பனிக்கட்டியை உண்டு' 6 நாட்கள் கடும் சோதனைக்குப் பின் உயிர்பிழைத்த அதிசயம்

பட மூலாதாரம், Tsering Lama

    • எழுதியவர், கமால் பரியார், பிபிசி நேபாளம், டோபி மான் & ஃப்ளோரா ட்ரூரி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கடைசியாக உயிருடன் காணப்பட்ட ஆறு நாட்களுக்குப் பிறகு, எவரெஸ்ட் சிகரத்திலிருந்து தவழ்ந்து இறங்கிக்கொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்ட நேபாள வழிகாட்டி, “பனிக்கட்டி” மற்றும் தனது சட்டைப்பையில் இருந்த சில சாக்லேட்டுகளைச் சாப்பிட்டதன் மூலமும் உயிர் பிழைத்ததாக பிபிசியிடம் கூறியுள்ளார்.

மலையிலிருந்து கீழே இறங்கும்போது தான் ‘காணாமல் போகவில்லை’ என்றும், மாறாக ஆக்சிஜன் தீர்ந்துபோனதால் அங்கேயே ‘இருக்க வேண்டிய’ கட்டாயம் ஏற்பட்டதாகவும் தாவா ஷெர்பா உறுதியாகக் கூறினார்.

மலைப்பகுதியில் தாவா ஷெர்பா உயிரிழந்துவிட்டதாகக் கருதப்பட்டு, நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்த அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளைச் செய்யத் தொடங்கியிருந்த நிலையில், அடிவாரத்திலுள்ள முகாம் பகுதியை நோக்கி மலையிலிருந்து அவர் கீழே ‘சறுக்கி’ வருவதை அங்கு சுத்தப்படுத்தும் ஒரு குழுவினர் கண்டனர்.

அவர் விமானம் மூலம் காத்மண்டுவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்; அங்கு நீர்ச்சத்து குறைபாடு, கடும் குளிரால் ஏற்படும் திசு பாதிப்பு மற்றும் எலும்பு முறிவு ஆகியவற்றுக்கான சிகிச்சையைப் பெற்றுக்கொண்டிருந்தபோது அவர் பிபிசியிடம் பேசினார்.

“நான் உயிருடன் இருப்பேன் என்று நினைக்கவில்லை,” என்று அவர் வெள்ளிக்கிழமை பிபிசி நேபாள மொழி சேவையிடம் கூறினார். “அப்படியே இறந்துவிடுவேன் என்று நினைத்தேன்.”

By admin