• Tue. Jul 8th, 2025

24×7 Live News

Apdin News

தாவூதி போரா இஸ்லாமியர்கள்: சென்னையில் தனி மொழி, கலாசாரத்துடன் வாழும் இவர்கள் யார்?

Byadmin

Jul 8, 2025


சென்னை, தாவூதி போரா இஸ்லாமியர்கள், ஷியா, இஸ்லாம், வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தாவூதி போரா இஸ்லாமியர்களின் உடைகளும் பிற இஸ்லாமியர்களின் உடைகளில் இருந்து வேறுபடுகின்றன. (கோப்புப் படம்)

ஷியா இஸ்லாமியர்களின் ஒரு பிரிவான தாவூதி போரா இஸ்லாமியர்கள், முஹர்ரம் தினத்தை ஒட்டி நடத்தும் பிரம்மாண்டமான வருடாந்திர மாநாடு, இந்த ஆண்டு சென்னையில் நடந்திருக்கிறது.

உலகெங்கிலுமிருந்து நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தாவூதி போரா இஸ்லாமியர்கள் இந்த நிகழ்விற்காக சென்னையில் கூடியிருந்தார்கள். தாவூதி போரா இஸ்லாமியர்கள் யார்? அவர்கள் மற்ற இஸ்லாமியர்களிடமிருந்து எப்படி வேறுபட்டவர்கள்?

வட சென்னையில் ஆன்மீக மாநாடு

வட சென்னையில் உள்ள மூர் தெரு, அங்கப்ப நாயக்கன் தெரு உள்ளிட்ட தெருக்கள் கடந்த பத்து நாட்களாக வித்தியாசமான கோலத்தைப் பூண்டிருந்தன. ‘யா ஹுசைன்’ என எழுதப்பட்ட கொடிகள், ஆயிரக்கணக்கான போரா இஸ்லாமியர்கள், நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள், உணவு பரிமாறும் இடங்கள் என மிகப் பெரிய இஸ்லாமிய திருவிழாவே அங்கு நடந்திருக்கிறது.

ஷியா இஸ்லாமியர்கள் தங்கள் மரியாதைக்குரியவராகக் கருதும் இமாம் ஹுசைனின் தியாகத்தை நினைவுகூரும் நாளான முஹரமை ஒட்டி, தாவூதி போரா இஸ்லாமியர்கள் ஒவ்வொரு ஆண்டும் உலகின் ஒரு நகரில் ஒரு மிகப் பெரிய ஆன்மீக மாநாட்டை நடத்துகின்றனர். இந்த முறை இந்த மாநாடு சென்னை நகரில் நடந்திருக்கிறது.

By admin