• Fri. Jul 10th, 2026

24×7 Live News

Apdin News

தினமும் 14 மணி நேரம் போன் பயன்படுத்திய நபர் எப்படி மீண்டு வருகிறார்?

Byadmin

Jul 10, 2026


மாரியோஸ்

பட மூலாதாரம், BBC/Emma Lynch

படக்குறிப்பு, மாரியோஸ் ஒரு நாளில் 14 மணிநேரம் தனது மொபைல் போனில் செலவிடக்கூடும் – இது தனது பாக்கெட்டில் இருக்கும் போதைப்பொருள் போன்றது என்று அவர் கூறுகிறார்.

    • எழுதியவர், ரூத் கிளெக்
    • பதவி, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

மாரியோஸின் மொபைல் போன் ‘பிங்’ என்ற சத்தத்துடன் ஒளிர்கிறது. இந்தச் செய்திக் கட்டுரை தொடர்பாக முதற்கட்டமாகப் பேசுவதற்காக நான் அவருக்கு அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ் அது.

உடனடியாகப் பதிலளிக்க அவர் விரும்புகிறார். அந்தத் தூண்டுதல், சொல்ல முடியாத அளவுக்குத் தீவிரமாக இருந்ததாக அவர் என்னிடம் பின்னர் கூறுகிறார்.

இருப்பினும், அவர் தற்போது தனது மொபைல் போன் அடிமைத்தனம் குறித்து ஒரு சிகிச்சை அமர்வில் இருக்கிறார். இப்போது அவரால் பதிலளிக்க முடியாது.

அவர் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்கிறார். ஆனால், அந்த அமர்வு முடிந்த உடனேயே அவர் மீண்டும் தனது போனைப் பார்க்கிறார். ஒரு மணிநேரம் கழித்து, நாங்கள் வீடியோ காலில் பேசுகிறோம்.

“மன்னிக்கவும்,” என்று நான் கூறுகிறேன். “உங்கள் அமர்வுக்கு இடையூறாக இருக்க நான் விரும்பவில்லை.”

By admin