• Sat. Jul 4th, 2026

24×7 Live News

Apdin News

திமுக, அதிமுக-வை இணைக்க எம்.ஜி.ஆர், கருணாநிதி செய்த முயற்சி தோல்வியடைந்தது ஏன்? என்ன நடந்தது?

Byadmin

Jul 4, 2026


திமுக, அதிமுக இணைப்பு, கருணாநிதி, எம்ஜிஆர்

பட மூலாதாரம், Twitter

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் ஜூலை 2ஆம் தேதி தவெக-வில் இணைந்தபோது, “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக-வுடன் கூட்டணி வைக்க முயன்றதால், தாங்கள் அதிமுகவில் இருந்து விலகியதாக” தெரிவித்திருந்தனர்.

அதேபோல அந்த நிகழ்வில் பேசிய பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “வரும் காலத்தில் திமுக, அதிமுக இணையும். ஏற்கெனவே 60% அதிமுகவினர் தவெக-வில் இணைந்துவிட்டனர். அப்படி திமுக, அதிமுக இணையும்போது மீதமுள்ள தொண்டர்களும் இங்கே வந்துவிடுவார்கள்” எனக் கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றாலும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை அந்தக் கட்சி பெறவில்லை. பின்னர், காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகள் தங்களிடம் இருந்த தலா 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவை தவெக-வுக்கு வழங்கின. அதோடு, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுகவின் ஒரு பிரிவினரும் தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

மறுபுறம், தவெக ஆட்சி அமைப்பதற்கு முன்பாக திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க எத்தனிப்பதாக செய்திகள் பரவின. அதற்குப் பிறகான தலைவர்களின் பேட்டிகளிலும் இதுகுறித்துப் பேசப்பட்டது.

கடந்த மே மாதம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி ‘இந்தியா டுடே’ ஊடகத்திற்கு அளித்த பேட்டி, இந்தத் தகவலுக்கு மேலும் வலு சேர்த்தது.

By admin