• Sat. Jun 6th, 2026

24×7 Live News

Apdin News

திமுக இந்தியா கூட்டணியை உடைத்து மூன்றாவது அணியை உருவாக்க நினைக்கிறதா?

Byadmin

Jun 6, 2026


திமுக இந்தியா கூட்டணியை உடைத்து மூன்றாவது அணியை உருவாக்க நினைக்கிறதா?

பட மூலாதாரம், MKSTALIN/X

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று திமுக அறிவித்துள்ளது.

அதற்கான காரணமாக, அதில் காங்கிரஸ் பங்கேற்கும் என்பதைக் குறிப்பிட்டுள்ள திமுக, இதுதொடர்பான அறிக்கையில், “தமிழ்நாட்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி, திமுகவுக்கு இழைத்த துரோகத்தால் மனக்காயமுற்று இருக்கும் கட்சியினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், இந்தக் கூட்டத்தில் திமுக பங்கேற்காது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், திமுக இல்லாத ‘இந்தியா’ கூட்டணி எத்தகையதாக இருக்கும், தேசிய அரசியலில் இதன் தாக்கம் எப்படிப்பட்டதாக இருக்கப் போகிறது என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.

தேசிய அளவில் காங்கிரஸ் தற்போது முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கிறது. ஆனால், அடுத்த தேர்தல் வரும்போது என்ன ஆகும் என்பதைத் தெளிவாகக் கூற முடியாத நிலை நிலவுவதாகக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன்.

ஏனெனில், “கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை நம்பி, இணைந்து பணியாற்றிய கட்சிகள் ஏறத்தாழ சிதறிக் கொண்டிருக்கும் சூழலைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக, நாட்டின் பல மாநிலங்களில், மாநிலக் கட்சிகளின் ஆதரவின்றி காங்கிரஸால் இயங்க முடியாது.

By admin